ADDED : ஜூன் 30, 2024 06:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதியில் பதற்றமான ஓட்டுச்சாவடி பகுதிகளில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ம் தேதி நடைபெற உள்ளது. தொகுதியில் உள்ள 275 ஓட்டுச் சாவடிகளில் பதற்றமான ஓட்டுச்சாவடி கண்டறியப்பட்டு அப்பகுதிகளில் பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டளிக்கும் வகையில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில், விக்கிரவாண்டி அடுத்த ஆசூர் கிராமத்தில் விழுப்புரம் டி.எஸ்.பி., சுரேஷ் தலைமையில் துணை ராணுவத்தினர் கிராமங்களில் உள்ள முக்கிய வீதிகளில் கொடி அணிவிப்பு நடத்தினர்.