ADDED : ஏப் 10, 2024 01:54 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதியில் பதற்றமான ஓட்டுச்சாவடி பகுதியில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
விழுப்புரம் லோக்சபா (தனி) தொகுதிக்குட்பட்ட விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் ராதாபுரம் ,பனையபுரம், தொரவி கிராமத்தில் பதற்றமான ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது.
இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வரும் 19ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் அச்சமின்றி ஓட்டளிக்கவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நேற்று மாலை 5:30 மணிக்கு பயிற்சி டி.எஸ்.பி., கார்த்திகா பிரியா முன்னிலையில் விக்கிரவாண்டி சப் இன்ஸ்பெக்டர் காத்தமுத்து தலைமையில் துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ், தனிப்பிரிவு குற்றபுலனாய்வு துறை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சிவக்குமார் மற்றும் 80 பேர் கொண்ட துணை ராணுவத்தினர் பங்கேற்றனர்.
மயிலம்
மயிலம் அடுத்த சின்னநெற்குணம், அவ்வையார்குப்பம் பகுதியில் இந்திய தீபத் எல்லைப் பாதுகாப்பு படையினர் மற்றும் மயிலம் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். திண்டிவனம் டி.எஸ்.பி., சுரேஷ் பாண்டியன் தலைமை தாங்கி கொடி அணிவகுப்பை துவக்கி வைத்தார். எல்லை பாதுகாப்பு அதிகாரி ஜஸ்வீர் சிங், இன்ஸ்பெக்டர்கள் மயிலம் கமலஹாசன், திண்டிவனம் விஜயகுமார், ஒலகூர், மயிலம் அனைத்து மகளிர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் பங்கேற்றனர்.

