/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பரையந்தாங்கல் ஊராட்சி பணி சேர்மன் ஏழுமலை பெருமிதம்
/
பரையந்தாங்கல் ஊராட்சி பணி சேர்மன் ஏழுமலை பெருமிதம்
பரையந்தாங்கல் ஊராட்சி பணி சேர்மன் ஏழுமலை பெருமிதம்
பரையந்தாங்கல் ஊராட்சி பணி சேர்மன் ஏழுமலை பெருமிதம்
ADDED : மே 31, 2024 02:44 AM

அவலுார்பேட்டை,: மேல்மலையனுார் அடுத்த பரையந்தாங்கல் ஊராட்சி தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என ஊராட்சி தலைவர் ஏழுமலை பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கிராமங்களின் தன்னிறைவால் மட்டுமே இந்தியா வாழும் என்றார் மகாத்மா காந்தி. கிராம வளர்ச்சிக்கு பொருளாதார குறியீடு மட்டுமே முக்கியம் அல்ல, தனி மனித வளர்ச்சியின் வாழ்க்கை தரமும், மகிழ்ச்சியும் முக்கியம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதல்வரின் ஆசியுடன், பரையந்தாங்கல் ஊராட்சியில் அமைச்சர் மஸ்தான், ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் ஆகியோரின் வாழ்த்துகளுடன் அத்தியாவசிய பணிகளை நான் நிறைவேற்றியுள்ளேன்.
எங்கள் ஊராட்சி முன்மாதிரி கிராம ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. நியமன குழு, பணிகள் குழு, வளர்ச்சி குழு, கல்வி குழு, வேளாண்மை நீர் பிரிவு முகடு குழு, சுகாதாரம், குடிநீர் குழு, கண்காணிப்பு குழு, மகிளா சபா, பாலா சபா ஆகியவைகள் முறையாக செயல்படுகின்றன.
திடம் மற்றும் திரவ கழிவு மேலாண்மை மக்கும் , மக்கா குப்பை மூலம் குப்பையை சிறப்பாக தரம் பிரிக்கப்படுகிறது.
பழங்குடி இருளர் பகுதியில் வசிப்பவர்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. 2000 மீட்டர் சிமென்ட் சாலை, மின் வசதி செய்யப்பட்டுள்ளது. புதிய ஊராட்சி கட்டடம் கட்டப்பட்டது.
ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம், தனி நபர் கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படுகிறது. மேலும், தடையின்றி 2 வேளையும் குடிநீர் , மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு டெய்லரிங், எம்பிராய்டிங், மெழுகுவர்த்தி தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
சுகாதார பூங்கா, திட கழிவு பூங்கா, சிறுவர் பூங்கா, விளையாட்டு மைதானம், அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் எங்கள் ஊராட்சி தேசிய விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனது பணிகளை ஊர்மக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.
இவ்வாறு ஊராட்சி தலைவர் ஏழுமலை கூறினார்.