/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில செயற்குழு கூட்டம்
/
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில செயற்குழு கூட்டம்
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில செயற்குழு கூட்டம்
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில செயற்குழு கூட்டம்
ADDED : ஆக 27, 2024 04:26 AM

விழுப்புரம் : தமிழகத்தில் 13 ஆண்டுகளாக, ரூ.12,500 சம்பளத்தில் பணிபுரியும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை, நிரந்தரம் செய்ய வேண்டும் என்று, பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.
விழுப்புரத்தில் தமிழக பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது.
மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். விழுப்புரம் மாவட்ட செயலர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். மகளிரணி அமைப்பாளர் சசிரேகா தீர்மானங்களை வாசித்தார்.
நிர்வாகிகள் துரைராஜ், மோகன், இளவரசன், பிரகாஷ் ஆகியோர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர். அன்பு, மணிகண்டன், வெற்றிவேல், சக்திவேல், தீர்த்தவேல், நாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். கேசவன் நன்றி கூறினார்.கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், தேர்தலின்போது பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிப்படி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வாழ்வாதாரத்துக்கு முதல் கட்டமாக, குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்.
பணி ஓய்வு பெறும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிக்கொடை ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்.
பணிக்காலத்தில் இறந்தால் அந்த குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.