/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாத்தனுார் அணை - நந்தன் கல்வாய் இணைக்க தீர்மானம் நிறைவேற்றம்
/
சாத்தனுார் அணை - நந்தன் கல்வாய் இணைக்க தீர்மானம் நிறைவேற்றம்
சாத்தனுார் அணை - நந்தன் கல்வாய் இணைக்க தீர்மானம் நிறைவேற்றம்
சாத்தனுார் அணை - நந்தன் கல்வாய் இணைக்க தீர்மானம் நிறைவேற்றம்
ADDED : மே 14, 2024 05:50 AM

செஞ்சி: சாத்தனுார் அணை - நந்தன் கல்வாய் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செஞ்சி அடுத்த பனமலை கிராமத்தில் நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். செயலாளர் ரவிச்சந்திரன், ரமேஷ்பாபு, அறவாழி முன்னிலை வகித்தனர். சங்கர் வரவேற்றார்.
பனமலை ஒன்றிய கவுன்சிலர் மணி, செஞ்சி ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் சங்க தலைவர் ரவி, நந்தன கால்வாய் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தென்பெண்ணை - பாலாறு நதிகள் இணைப்பு திட்டத்தில் சாத்தனுார் - நந்தன்கல்வாய் இணைப்பு திட்டத்தை இந்த ஆண்டுக்குள் நிறைவேற்ற வேண்டும்.
நந்தன் கால்வாயை முறைப்படுத்தப்பட்ட பாசன கால்வாயாக அறிவித்து ஆண்டு தோறும் பராமரிக்கவும், பாசன ஏரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.