/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குடியிருப்பை மழைநீர் சூழ்ந்ததால் காணையில் மக்கள் சாலை மறியல்
/
குடியிருப்பை மழைநீர் சூழ்ந்ததால் காணையில் மக்கள் சாலை மறியல்
குடியிருப்பை மழைநீர் சூழ்ந்ததால் காணையில் மக்கள் சாலை மறியல்
குடியிருப்பை மழைநீர் சூழ்ந்ததால் காணையில் மக்கள் சாலை மறியல்
ADDED : மே 08, 2024 11:50 PM
விழுப்புரம் : காணையில் குடியிருப்பு பகுதியை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காணை, சீனுவாசன் நகரில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். தாழ்வான பகுதியாக உள்ளதால் இங்கு, தண்ணீர் தேங்காமல் வெளியேறும் வகையில் கால்வாய் வசதிக் கோரி அங்குள்ள பொதுமக்கள் பல முறை பி.டி.ஓ., மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தற்போது வரை நடவடிக்கை இல்லை.
இந்த சூழலில், நேற்று சீனுவாசன் நகரில் மழைநீர் குளமாக சூழ்ந்து சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், காணை பஸ் நிறுத்தம் அருகேவுள்ள திருக்கோவிலுார் சாலையில் நேற்று காலை 9:15 மணிக்கு திடீரென மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த காணை போலீசார் மற்றும் பி.டி.ஓ., அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அங்கு விரைவில் கால்வாய் அமைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததால், 9:45 மணிக்கு பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் திருக்கோவிலுார் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.