/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
/
மயிலம் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
ADDED : ஜூலை 09, 2024 11:30 PM

மயிலம்: திண்டிவனம் சப் கலெக்டர் அலுவலகம் எதிரே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மயிலம் அருகே உள்ள பேரணி கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக உதவியாளர் முனுசாமி மகன் குமார். இவர் பல ஆண்டுகளாக அவரது வீட்டின் எதிரே உள்ள சிமென்ட் சாலையை பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.இது குறித்து பொதுமக்கள் கலெக்டரிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
கிரம மக்கள் மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் பிரதான சாலையை பல ஆண்டுகளாக ஆக்கிரமித்துள்ளதை பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நேற்று மதியம் 3:00 மணியளவில் திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் மனு அளிக்க 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்தனர்.
அப்போது அலுவலகத்தில் அதிகாரிகள் இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சப் கலெக்டர் அலுவலகம் எதிரே மாலை 3:45 மணிக்கு சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மயிலம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.