/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பயணிகள் நிழற்குடை இல்லாததால் வெயிலில் நின்று மக்கள் அவதி
/
பயணிகள் நிழற்குடை இல்லாததால் வெயிலில் நின்று மக்கள் அவதி
பயணிகள் நிழற்குடை இல்லாததால் வெயிலில் நின்று மக்கள் அவதி
பயணிகள் நிழற்குடை இல்லாததால் வெயிலில் நின்று மக்கள் அவதி
ADDED : மே 02, 2024 07:14 AM
விழுப்புரம்: விழுப்புரம் செஞ்சி மெயின் ரோட்டில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் வெயிலில் நின்று சிரமப்படுகின்றனர்.
விழுப்புரம் - சென்னை பைபாஸ் சாலை செல்லும் வழியில் உள்ள செஞ்சி சாலையில் பஸ்கள் நிற்கும் இடம் உள்ளது. இங்கு, தினந்தோறும் செஞ்சி மார்க்கத்தில் செல்லும் பயணிகள் பலரும் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் செஞ்சி பஸ்கள் நிற்கும் இடத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் நிற்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதில், கர்ப்பிணி பெண்கள், முதியோர், மாணவர்கள் பலரும் வெயிலில் பஸ்சிற்காக நீண்ட நேரம் நிற்க முடியாமல், எதிரேவுள்ள மரத்தின் நிழலில் நின்று விட்டு, பஸ் வரும் போது அவசரமாக ஓடிவந்து ஏறி செல்கின்றனர். வயதானோர், கர்ப்பிணி பெண்கள் அந்த வெயிலிலே காத்திருந்து ஏறுவதால் சிலர் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளனர்.
மக்களின் சூழலை கருத்தில் கொண்டு செஞ்சி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடையை துரிதமாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

