/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பாதாள சாக்கடையில் அடைப்பு கழிவுநீர் தேக்கத்தால் மக்கள் அவதி
/
பாதாள சாக்கடையில் அடைப்பு கழிவுநீர் தேக்கத்தால் மக்கள் அவதி
பாதாள சாக்கடையில் அடைப்பு கழிவுநீர் தேக்கத்தால் மக்கள் அவதி
பாதாள சாக்கடையில் அடைப்பு கழிவுநீர் தேக்கத்தால் மக்கள் அவதி
ADDED : செப் 13, 2024 07:29 AM

விழுப்புரம்: விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு மேன்ேஹால் வழியாக கழிவுநீர் வெளியேறி குளம்போல் தேங்கியதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
விழுப்புரம், பூந்தோட்டம் ராஜராஜேஸ்வரி நகர் பகுதியில், பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு, ஆளிறங்கு குழிகள் வழியாக கழிவு நீர் வழிந்தோடி வருகிறது.
தொடர்ந்து, 15 நாட்களுக்கும் மேலாக திருச்சி சாலையிலிருந்து, பூந்தோட்டம் பகுதி தனியார் பள்ளிக்கும், நாராயணன் நகர் உள்ளிட்ட பல்வேறு நகர் பகுதிகளுக்கும் செல்லும் முக்கிய சாலையில் குளம் போல் சாக்கடை கழிவுநீர் வழிந்து நிற்கிறது.
இதனால், பொது மக்கள், குறிப்பாக பள்ளி மாணவர்கள் அந்த வழியாக நடந்து சென்றும், வாகனங்களில் சென்றும், குண்டும் குழியுமாகி, சாக்கடை நீர் தேங்கியுள்ள அந்த சாலையில் அவதிப்பட்டு வருகின்றனர்.
துர்நாற்றமும் வீசி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.