/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் 8ம் தேதி மக்கள் நீதிமன்றம்
/
விழுப்புரத்தில் 8ம் தேதி மக்கள் நீதிமன்றம்
ADDED : பிப் 28, 2025 05:24 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் 8ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது என, முதன்மை மாவட்ட நீதிபதி மணிமொழி தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
விழுப்புரத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் எனது தலைமையில் வரும் 8ம் தேதி லோக் அதாலத் எனும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. விழுப்புரம் நீதிமன்ற வளாகத்தில் 7 அமர்வுகளிலும், கள்ளக்குறிச்சி, செஞ்சி, திண்டிவனம், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை, சங்கராபுரம், வானுார், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லுார் நீதிமன்றங்களில் வட்ட சட் டப்பணிகள் குழு மூலமாக 18 அமர்வுகளிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது.
மோட்டார் வாகன விபத்து, காசோலை, நிலம் பிரச்னை, வங்கி கடன் தொடர்பான நீதிமன்ற வழக்குகள், குடும்ப நலம் மற்றும் சமரச முறையில் தீர்வு காணக்கூடிய வழக்குகளை சமரச முறையில் தீர்வு செய்து கொள்ளலாம்.
நிலுவை வழக்குகளை தவிர புதிதாக தாக்கல் செய்ய தகுதியுள்ள வழக்குகள், பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். மக்கள் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு மீது மேல்முறையீடு செய்ய முடியாது. மக்கள் நீதிமன்றத்தில் வழக்காளர்களுக்கு செலவின்றி விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள், வழக்கறிஞர்கள் வழக்குகளுக்கு தீர்வு காணலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.