/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வி.ஆர்.பி., மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் சதம்
/
வி.ஆர்.பி., மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் சதம்
வி.ஆர்.பி., மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் சதம்
வி.ஆர்.பி., மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் சதம்
ADDED : மே 07, 2024 11:59 PM

விழுப்புரம்: விழுப்புரம் வி.ஆர்.பி., பள்ளி பிளஸ் 2 தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய 185 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். மாணவர் ஆதித்யன் 580, மாணவி ராஜலட்சுமி 579, பிரதீபா மற்றும் மாணவர் கிருஷ்ணகுமார் தலா 578 மதிப்பெண் பெற்று, சிறப்பிடம் பெற்றனர்.
மேலும், கணிதத்தில் 15 பேர், உயிரியல் பாடத்தில் 11 பேர், கணினி அறிவியலில் 11 பேர், தாவரவியலில் 7 பேர், பொருளியலில் 4 பேர், கணினி பயன்பாட்டியல் 2 பேர், இயற்பியலில் 2 பேர், விலங்கியலில் மாணவர் உட்பட 53 மாணவ, மாணவிகள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மேலும், 570 மதிப்பெண்ணுக்கு மேல் 18 பேர், 550க்கு மேல் 35 பேர், 520க்கு மேல் 60 பேர், 500க்கு மேல் 30 பேரும் பெற்றுள்ளனர்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தாளாளர் சோழன், சால்வை அணிவித்து பாராட்டினார்.
அரசு வழக்கறிஞர் நாகராஜன், வழக்கறிஞர் மனோ, பள்ளி தலைமை ஆசிரியர் கந்தசாமி, உதவி தலைமை ஆசிரியர் பிரித்திவிராஜ் மற்றும்ஆசிரியர்களும், மாணவர்களுக்கு பாராட்டுதெரிவித்தனர்.

