/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மொபைல்போன் டவருக்கு எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் மனு
/
மொபைல்போன் டவருக்கு எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் மனு
மொபைல்போன் டவருக்கு எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் மனு
மொபைல்போன் டவருக்கு எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் மனு
ADDED : ஆக 17, 2024 03:02 AM

விழுப்புரம்: கீழ்ப்பெரும்பாக்கம் திருக்குறிப்புத்தொண்டர் நகர் பகுதியில் மொபைல் போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் திருக்குறிப்புத்தொண்டர் நகர் பகுதி பொதுமக்கள், அந்தப் பகுதியில் தனியார் மொபைல்போன் போன் டவர் அமைக்கும் பணியை நேற்று முன்தினம் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து நேற்று காலை, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்த அப்பகுதி மக்கள், கோரிக்கை மனு அளித்து கூறியதாவது:
கீழ்ப்பெரும்பாக்கம் திருகுறிப்புதொண்டர் நகர் பகுதியில் ஷர்மிளா நகர், கணபதி நகர், பாலாஜி நகர் சுற்றுப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இந்த பகுதியில் திடீரென தனியார் நிறுவனம் மொபைல்போன் டவர் அமைக்கும் பணி மேற்கொண்டு வருகிறது.
மொபைல்போன் டவர் வைப்பதால், கதிர்வீச்சு தாக்கத்தால் பொதுமக்களுக்கு புற்றுநோய் போன்ற பாதிப்பு ஏற்படும் என மக்கள் அச்சப்படுகின்றனர். இதனால், அங்கு மொபைல் போன் டவர் வைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்தனர்.