/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அனுமதியின்றி மொபைல் போன் டவர்; தடுத்து நிறுத்தக்கோரி கலெக்டரிடம் மனு
/
அனுமதியின்றி மொபைல் போன் டவர்; தடுத்து நிறுத்தக்கோரி கலெக்டரிடம் மனு
அனுமதியின்றி மொபைல் போன் டவர்; தடுத்து நிறுத்தக்கோரி கலெக்டரிடம் மனு
அனுமதியின்றி மொபைல் போன் டவர்; தடுத்து நிறுத்தக்கோரி கலெக்டரிடம் மனு
ADDED : செப் 04, 2024 12:17 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் மொபைல் போன் டவர் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என கீழ்ப்பெரும்பாக்கம் பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் ஷர்மிளா நகர், கணபதி நகர், பாலாஜி நகர் பகுதி மக்கள், அந்த பகுதியில் தனியார் நிறுவன மொபைல் போன் டவர் பணியை தடுத்து நிறுத்தக்கோரி கலெக்ட்டர் அலுவலகத்தில் அளித்த மனு:
கீழ்பெரும்பாக்கம் எங்கள் குடியிருப்பு பகுதியில், தனியார் மொபைல் போன் நிறுவனம், அனுமதியின்றி டவர் அமைப்பதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடல் நலம் பாதிக்கும் என்பதால், அதனை தடுத்து நிறுத்த வேண்டும்.
குடியிருப்புக்கு மையத்தில் டவர் அமைக்கப்பட்டால், மின் காந்த கதிர்வீச்சுடன் தொடர்பு கொள்ளும்போது உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகிறது. வயதானவர்கள், குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். பொது மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல், தனிப்பட்டவர்களின் லாபநோக்கத்துடன் அமைக்கப்படுகிறது. நகராட்சி தரப்பில் இதற்கு அனுமதி வழங்கவில்லை. வேறொரு பகுதியில் பொதுமக்கள் எதிர்த்ததால், அதனை மாற்றி எங்கள் பகுதியில் அமைக்கின்றனர். இதனால், தற்போது நடந்து வரும் செல்போன் கோபுர கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.