ADDED : மார் 02, 2025 04:45 AM

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் போன் நேரு மேல்நிலைப் பள்ளியில் 33வது ஆண்டு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் வாசுதேவன் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் விஜயசாந்தி வாசுதேவன் வரவேற்றார். லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் சுபாஷ் சந்திரபோஸ் முன்னிலை வகித்தார். லயன்ஸ் சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் செல்வகாந்தி, ராஜன், தணிகாச்சலம், விஜயலட்சுமி சிவக்குமார், சரவணன் வாழ்த்துரை வழங்கினர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் அரசு பொது தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பதக்கம், கேடயம் வழங்கப்பட்டது.
அப்போது, கே.வி.பி., வங்கி மேலாளர் ஆனந்த விக்னேஷ், துணை மேலாளர் அஸ்வின், காமதேனு லயன்ஸ் சங்க தலைவர் தமிழ்ச்செல்வன், கோஸ்ட் லயன்ஸ் சங்க தலைவர் ராஜா, மாவட்ட தலைவர் வெங்கடேசன், விழுப்புரம் ஜங்ஷன் லயன்ஸ் சங்க தலைவர் கோபு உட்பட பலர் கலந்துகொண்டனர்.