/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது 'போக்சோ'
/
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது 'போக்சோ'
ADDED : ஆக 03, 2024 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரன் மகன் சிவா, 19; கூலித் தொழிலாளி. இவர், 16 வயது சிறுமியை காதலித்துள்ளார்.
இருவரும் நெருங்கிப் பழகியதில் சிறுமி கற்பமானார்.
இதனையறிந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், சிவா மீது விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.