/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முன்மாதிரி ஊராட்சியாக மாற்றுவேன் பொலக்குப்பம் ஊராட்சி தலைவர் உறுதி
/
முன்மாதிரி ஊராட்சியாக மாற்றுவேன் பொலக்குப்பம் ஊராட்சி தலைவர் உறுதி
முன்மாதிரி ஊராட்சியாக மாற்றுவேன் பொலக்குப்பம் ஊராட்சி தலைவர் உறுதி
முன்மாதிரி ஊராட்சியாக மாற்றுவேன் பொலக்குப்பம் ஊராட்சி தலைவர் உறுதி
ADDED : மே 30, 2024 11:10 PM

திண்டிவனம்: 'நிலத்தடி நீரை பாதுகாக்க குளம் உருவாக்குதல் போன்ற தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன்' என பொலக்குப்பம் ஊராட்சி தலைவர் பூங்கா பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பெலாக்குப்பம், வேம்பூண்டி கிராமத்தில் மேற்கொண்டு பணிகள் குறித்து கூறியதாவது:
நான் ஊராட்சி தலைவராக பொறுப்பேற்ற நாள் முதல் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றி வருகிறேன். அடிப்படை தேவைகளான தெருவிளக்கு நெறிப்படுத்தி பராமரிப்பது. மூன்று கிராமங்கள் உள்ளடக்கிய ஊராட்சியில் இரண்டு கிராமங்களில் வீடுதோறும் குடிநீர் வழங்குவதில் தன்னிறைவு பெற்ற கிராமமாக உள்ளது. மூன்றாவது கிராமத்தினையும் ஒரு மாத கால அளவில் வீடுதோறும் குடிநீர் வழங்குவதில் தன்னிறைவு பெறுவதற்கான திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.
அரசு திட்டங்களை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்க்கும் மகத்தான பணிகளை மேற்கொண்டு குறிப்பாக குழந்தைகளிடம் நட்புடன் இருத்தல், குழந்தைளின் கல்வி இடைநிற்றலை களைதல், குழந்தைகள் நலன் சார்ந்த விழிப்புணர்வு பிரசாரங்கள், பெண்கள் நலன் சார்ந்த மகளிர் குழுக்களை உருவாக்கி சிறு சேமிப்பு, சுழல்நிதி கடன், பொருளாதார கடன், வங்கிக் கடன்கள் போன்றவற்றை எளிதில் கிடைக்கும் வகையில் வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்தி வருகிறேன்.
இளைஞர்களின் நலனை போற்றுகின்ற வகையில் விளையாட்டு திடல்களை உருவாக்கியும், விளையாட்டு உபகரணங்கள் வாங்கி கொடுத்து விளையாட்டு ஆர்வத்தினை துாண்டும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறேன்.
அதே போல் வேலைவாய்ப்பினை சிப்காட் நிறுவனங்கள் மூலம் வழி காட்டி வருகிறேன்.
விரைவில் பெலாக்குப்பம் ஊராட்சியினை தமிழகத்தின் முன்மாதிரி கிராமமாக உருவாக்க, கிராம மக்கள் உதவியுடன் பாடுபட்டு வருகிறேன்.
இவ்வாறு பூங்கா பாக்யராஜ் கூறினார்.