ADDED : மார் 15, 2025 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கல்லுாரி மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த வி.அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் மகள் ஜீவிதா, 21; மயிலம் அருகே உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., 3ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 13ம் தேதி, வீட்டிலிருந்து கல்லுாரிக்குச் செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.