/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாடகை கேட்டவரை தாக்கியவர்களுக்கு போலீஸ் வலை
/
வாடகை கேட்டவரை தாக்கியவர்களுக்கு போலீஸ் வலை
ADDED : மே 28, 2024 05:11 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் கடை வாடகை கேட்ட உரிமையாளரை தாக்கியவர்கள் மீது, போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
திருவெண்ணெய்நல்லூர் அடுத்த தி.எடையார் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் சுரேஷ்,36; இவர், தனது மனைவி சத்யாவுடன்,32; சேர்ந்து, விழுப்புரம் ரசாக் லேஅவுட் பகுதியை சேர்ந்த சமுத்திரகனி,45; என்பவரது கடையை, வாடகை எடுத்து, கடந்த 3 மாதமாக டீ கடை நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 3 மாதமாக கடை வாடகை தராமல் இருந்ததால், கடந்த 8ம் தேதி கடையின் உரிமையாளர் சமுத்திரகனி நேரில் சென்று வாடகை கேட்டபோது, தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், சுரேஷீம் அவரது மனைவியும் சேர்ந்து, சமுத்திரகனியை தாக்கியுள்ளனர். அப்போது, கடை வாடகை கேட்டு, சுரேஷின் மனைவி சத்தியாவை, சமுத்திரகனியும் தாக்கியுள்ளார்.
இது குறித்து, இரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார், 3 பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.