/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோர்ட்டில் ஆஜராகாத ரவுடிக்கு போலீஸ் வலை
/
கோர்ட்டில் ஆஜராகாத ரவுடிக்கு போலீஸ் வலை
ADDED : மே 15, 2024 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் :வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுக்கும் ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மணிமேகலை தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் அப்பு என்கிற கலையரசன், 30; ரவுடியான இவர் மீது, பல்வேறு மோதல், அடிதடி வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், விழுப்புரம் செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வரும் ஒரு மோதல் வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாகியுள்ளார்.
இது குறித்து, விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார், அப்பு மீது வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.

