/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
/
'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
ADDED : ஜூலை 04, 2024 12:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் யமுனா பாய் தலைமை தாங்கி, தினமலர் - பட்டம் இதழின் சேவை மற்றும் அவசியம் குறித்து விளக்கி பேசினார்.
உதவி தலைமை ஆசிரியர் பெரியசாமி, பட்டம் பயிற்சி ஆசிரியர் நரசிங்கம், உடற்கல்வி ஆசிரியர் சிவபாலன் முன்னிலை வகித்தனர்.
விழுப்புரம் பா.ம.க., மாவட்ட இளைஞரணி செயலாளர் முன்னாள் கவுன்சிலர் சி.த.ராஜா, கிழக்கு நகர தலைவர் கே.ராஜா ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு பட்டம் இதழை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.