/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வன்கொடுமை தடுப்புச் சட்டம்: கண்காணிப்பு குழு கூட்டம்
/
வன்கொடுமை தடுப்புச் சட்டம்: கண்காணிப்பு குழு கூட்டம்
வன்கொடுமை தடுப்புச் சட்டம்: கண்காணிப்பு குழு கூட்டம்
வன்கொடுமை தடுப்புச் சட்டம்: கண்காணிப்பு குழு கூட்டம்
ADDED : ஆக 04, 2024 11:25 PM
விழுப்புரம்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், முதலாம் காலாண்டு மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கி பேசியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2023-24ம் நிதியாண்டில் தற்போது வரை பதிவு செய்த 120 வழக்குகளில் பாதித்த 274 பேருக்கு, தீருதவி தொகையாக 2 கோடியே 51 லட்சத்து 81 ஆயிரத்து 668 ரூபாய் நிலுவையின்றி வழங்கப்பட்டுள்ளது.
வன்கொடுமையால் பாதித்த இறந்த நபர்களின் வாரிசுதாரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதன்படி, 24 பேரின் வாரிசுகளுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக தலா 5,000 ரூபாய் மற்றும் பஞ்சப்படி சேர்த்து 21 லட்சத்து 80 ஆயிரத்து 618 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு வன்கொடுமை பாதித்தோருக்கு தீருதவி தொகையாக வழங்க விழுப்புரம் மாவட்டத்திற்கு 2 கோடியே 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வழக்குகளில் பாதித்து இறந்த குடும்பங்களில் 10 பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2 வழக்குகளில் பாதித்த இறந்தோரின் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் பள்ளிகள், கல்லுாரிகள், விடுதிகளில் காவல் துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவின் சார்பில் ஒன்றிணைவோம் சமூக விழிப்புணர்வு தொடர் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பழனி பேசினார்.
எஸ்.பி., தீபக்சிவாச், டி.ஆர்.ஒ., பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம், ஆர்.டி.ஓ., காஜா ஷாகுல்அமீது, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் வளர்மதி உட்பட பலர் பங்கேற்றனர்.