ADDED : மார் 01, 2025 04:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார் : கடன் பிரச்னையால், தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
வானுார் அடுத்த வி.பரங்கனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முகிலன், 36; தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் விற்பனை பிரிவு மேலாளர். இவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன், திருச்சிற்றம்பலம் வெங்கடேஸ்வரா நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டின் அறையில் துாங்கியவர் நேற்று காலை வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த மனைவி மற்றும் உறவினர்கள் கதவை உடைத்து பார்த்த போது, முகிலன் துாக்கில் தொங்கினார். பின், புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் இறந்தார்.
புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில், கடன் பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.