/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண் குழந்தைகள் பாதுகாப்பு; செல்பி மேடை திறப்பு விழா
/
பெண் குழந்தைகள் பாதுகாப்பு; செல்பி மேடை திறப்பு விழா
பெண் குழந்தைகள் பாதுகாப்பு; செல்பி மேடை திறப்பு விழா
பெண் குழந்தைகள் பாதுகாப்பு; செல்பி மேடை திறப்பு விழா
ADDED : செப் 06, 2024 12:20 AM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு சுய புகைப்படம் பதாகை மேடை திறப்பு விழா நடந்தது.
'பெண் குழந்தைகளைக் காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்டத்தின் கீழ், பெருந்திட்ட வளாகம், சிறுவர் பூங்காவில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கி சுயபுகைப்படம் ( செல்பி பாயிண்ட்) பதாகை மேடையை திறந்து வைத்தார்.
மேடையில், கருவில் உள்ள பெண் குழந்தையை அழிக்க மாட்டோம், பெண் குழந்தை என பாகுபாடு பார்க்க மாட்டோம். பெண் குழந்தைகளுக்கு சம கல்வி அளிப்பேன். அனைத்து சூழலிலும் பாதுகாப்பேன். பெண்களுக்கு சம வேலைக்கான ஊதியம் உட்பட பல விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பார்கவி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.