நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை: மேல்மலையனுாரில் நுாறு நாள் திட்டத்தில் கூலி குறைத்து வழங்குவதை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேல்மலையனுார் ஒன்றியத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், அளவீடு என கூலியை குறைத்து
வழங்குவதை கண்டித்து மேல்மலையனுார் பி.டி.ஓ., அலுவலகம் எதிரே விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். மாநில துணைச் செயலாளர் மாரியப்பன், மாவட்ட தலைவர் அர்ஜூனன், செயலாளர் சுந்தரமூர்த்தி, மா.கம்யூ., வட்ட செயலாளர் முருகன் கண்டன உரையாற்றினர்.
மாதர் சங்க மாவட்ட பொருளாளர் இலக்கிய லட்சுமி, வேல், ஹரிஹரகுமார், அண்ணாமலை, வெங்கடபதி உட்பட பலர் பங்கேற்றனர்.