/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சார்பதிவாளர் அலுவலகம் இடமாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
சார்பதிவாளர் அலுவலகம் இடமாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சார்பதிவாளர் அலுவலகம் இடமாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சார்பதிவாளர் அலுவலகம் இடமாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 08, 2025 03:57 AM

திண்டிவனம் : திண்டிவனத்தில் அவரைப்பாக்கம் சார் பதிவா ளர் அலுவலகத்தை இடையன்குளம் பகுதிக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திர எழுத்தர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
திண்டிவனம் சந்தைமேட்டில், மாவட்ட பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு, திண்டிவனம் இணைப்பதிவாளர் அலுவலகம் (1), அவரைப்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது
இதில், அவரைப்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தை மட்டும், திண்டிவனம் - புதுச்சேரி ரோட்டில் உள்ள இடையன்குளம் பகுதிக்கு மாற்ற ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்கு பொது மக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை 11:45 மணியளவில், சந்தைமேட்டில் மாவட்ட பதிவாளர் அலுவலகம் எதிரே, பத்திர எழுத்தர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொது மக்கள சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
அவரைப்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திண்டிவனம் பகுதியில் ஒருங்கிணைந்த பத்திர பதிவு வளாகம் அமைக்க வலியுறுத்தியும் நடந்த ஆர்ப்பாட்டத்தில், வழக்கறிஞர்கள் நந்தகுமார், கண்ணபிரான், முருகன், கந்தசாமி, சுகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.