/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்
ADDED : ஆக 06, 2024 06:57 AM

செஞ்சி : பள்ளிக் கல்வித் துறை சார்பில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
விழாவிற்கு, சி.இ.ஓ., அறிவழகன் தலைமை தாங்கினார். செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி சேர்மன் மொக்தியார் முன்னிலை வகித்தனர். டி.இ.ஓ., சிவசுப்ரமணி வரவேற்றனர்.
அமைச்சர் மஸ்தான், செஞ்சி மேல்மலையனுார் தாலுகாவில் உள்ள 29 அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலை பள்ளிகளில் 11ம் வகுப்பு படிக்கும் 3,378 மாணவ, மாணவிகளுக்கு 1 கோடியே 63 லட்சம் மதிப்பிலான இலவச சைக்கிள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைச் சேர்மன் ராஜலட்சுமி, சி.இ.ஓ., வின் நேர்முக உதவியாளர் பெருமாள், பள்ளிக்கல்வி ஆய்வாளர் விநாயகமூர்த்தி, பி.டி.ஓ., தலைவர்கள் மாணிக்கம், திலகவதி, பேரூராட்சி கவுன்சிலர்கள், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
மேல்ஒலக்கூர் அரசு பள்ளி தலைமையாசிரியர் பாலசுப்ரமணியன் தொகுத்து வழங்கினார்.
செஞ்சி பள்ளி தலைமை யாசிரியர் ராமசாமி நன்றி கூறினார்.