/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டவுன் பஸ்கள் இன்றி பொதுமக்கள், மாணவர்கள் தவிப்பு: கோவில் விழாவுக்காக 'ஸ்பெஷல் டிரிப்' இயக்கம்
/
டவுன் பஸ்கள் இன்றி பொதுமக்கள், மாணவர்கள் தவிப்பு: கோவில் விழாவுக்காக 'ஸ்பெஷல் டிரிப்' இயக்கம்
டவுன் பஸ்கள் இன்றி பொதுமக்கள், மாணவர்கள் தவிப்பு: கோவில் விழாவுக்காக 'ஸ்பெஷல் டிரிப்' இயக்கம்
டவுன் பஸ்கள் இன்றி பொதுமக்கள், மாணவர்கள் தவிப்பு: கோவில் விழாவுக்காக 'ஸ்பெஷல் டிரிப்' இயக்கம்
ADDED : மார் 05, 2025 05:36 AM

விழுப்புரம்: டவுன் பஸ்கள் சிறப்பு பஸ்களாக இயக்கப்பட்டதால் நேற்று பொதுத்தேர்வு எழுதிய கிராமப்புற மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பஸ் வசதியின்றி அவதியடைந்தனர்.
]விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், வெளி மாவட்டங்களுக்கும், உள்ளூர் பகுதிகளுக்கும், பஸ்கள் இயக்கப்படுகிறது. திருவண்ணாமலை, மேல்மலையனுார் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில் திருவிழா காலங்களில் கூடுதல் சிறப்பு பஸ்களை இயக்கி வருகின்றனர்.
அந்த வகையில், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் தேரோட்டத்திற்கு, விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் நேற்று 250க்கும் மேற்பட்டசிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
இதில், பெரும்பாலும் பிங்க் நிறத்திலான டவுன் பஸ்கள் சிறப்பு பஸ்களாக இயக்கப்பட்டன. இதனால், மாவட்ட தலைநகர பகுதியிலிருந்து, கிராமங்களுக்கு சென்ற டவுன் பஸ்கள் இல்லாமல் பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அவதியடைந்தனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு நடந்து வரும் நிலையில், கிராமங்களிலிருந்து நகர்ப்புற தேர்வு மையங்களுக்கு செல்ல வேண்டிய மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
விழாக்காலங்களில், முன் அறிவிப்பின்றி டவுன் பஸ்கள், சிறப்பு பஸ்களாக இயக்குவதை கைவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'திருவிழாவிற்கு பொதுமக்கள் அதிகம் கூடுவதால், சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னை போன்ற பெருநகர பயணிகள் தேவைக்காக, ஏராளமான புறநகர் பஸ்கள் அந்த மார்க்கத்தில் இயக்கப்படுகிறது.
அதனால், சிறப்பு பஸ் தேவைக்காக குறைந்தளவில்தான் டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. மேல்மலையனுார் பகுதியில் குறுகிய கிராமப்புற சாலை என்பதால், வயல்வெளி பகுதியில், எளிதாக திரும்பிச் செல்ல, டவுன் பஸ்களைத்தான் இயக்க வேண்டியுள்ளது' என்றனர்.