/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோவிந்தசாமி அரசு கல்லுாரியில் பொது கலந்தாய்வு துவக்கம்
/
கோவிந்தசாமி அரசு கல்லுாரியில் பொது கலந்தாய்வு துவக்கம்
கோவிந்தசாமி அரசு கல்லுாரியில் பொது கலந்தாய்வு துவக்கம்
கோவிந்தசாமி அரசு கல்லுாரியில் பொது கலந்தாய்வு துவக்கம்
ADDED : ஜூலை 07, 2024 04:11 AM
விழுப்புரம்: திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலை கல்லுாரியில் மாணவர்கள் சேர்க்கைகான மூன்றாம் கட்ட பொது கலந்தாய்வு நாளை (8ம் தேதி) துவங்கி வரும் 10ம் தேதி வரை நடக்கவுள்ளது.
கலந்தாய்வில், விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் பங்கேற்க வேண்டும்.
நாளை (8ம் தேதி) பி.எஸ்.சி., கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், புவியமைப்பியல், கணினி அறிவியல், புள்ளியியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது. 9ம் தேதி பி.காம்., வணிகவியல், பி.பி.ஏ., வணிக நிர்வாகவியல், 10ம் தேதி பி.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு ஆகிய பாடப்பிரிவுகளுக்கு பொது கலந்தாய்வு நடக்கிறது.
இதில், பங்கேற்போர், பதிவிறக்கம் செய்த விண்ணப்பம், பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ் அசல், இரு நகல்கள், பாஸ்போட் போட்டோ 3, வங்கி கணக்கு புத்தக முதல்பக்க நகல், ஆதார் 2 நகல்கள், உரிய சேர்க்கை கட்டணத்தை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) நாராயணன் தெரிவித்துள்ளார்.