/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாற்றுத் திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
/
மாற்றுத் திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஆக 28, 2024 05:53 AM

விக்கிரவாண்டி, : விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளிகள் 100 நாள் வேலை கேட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் சார்பில் விக்கிராவண்டி ஒன்றிய அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றியத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
போராட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 100 நாள் வேலை திட்ட பணிகளை உடனே வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
போராட்டம் நடத்தியவர்களிடம், உதவி திட்ட அலுவலர் ராஜேந்திரன், பி.டி.ஓ., குலோத்துங்கன் , துணைபி.டி.ஓ., சாஹிதா பாணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், சிந்தாமணி, சாத்தனுார் ஊராட்சிகளுக்கு வரும் நாளை 29ம் தேதி பணி வழங்குவது எனவும், முண்டியம்பாக்கம் ஊராட்சியில் பணிக்கான இடத்தை ஆய்வு பணி வழங்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர்.