ADDED : செப் 03, 2024 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் ரயில் நிலையத்தில் பழைய தண்டவாளங்களில் ரயில்கள் செல்லும் உறுதி தன்மை குறைந்துள்ளதை அதிகாரிகள் அறிந்தனர்.
இதையொட்டி, ரயில்வே மேம்பாலம் அருகே திருச்சி மார்க்கத்தில் உள்ள தண்டவாளங்கள் இணைப்பு பகுதியான பாயிண்ட் உள்ள இடத்தில், 30 மீட்டர் தண்டவாளம் புதிதாக மாற்றும் பணிகள் நடந்தது.
ரயில்வே முதுநிலை பொறியாளர் சுருளா சத்தியநாராயணன், துணை முதுநிலை பொறியாளர் பானுச்சந்தர், மேஸ்திரி அரிகிருஷ்ணன், ராஜேந்திரன், டிராலி மேன்கள் இளையராஜா, பிரசாந்த், சரண்ராஜ் மற்றும் ஊழியர்கள் பணிகளில் ஈடுபட்டனர்.