/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தண்டவாளம் பராமரிப்பு பணி ரயில்வே அதிகாரிகள் ஆய்வு
/
தண்டவாளம் பராமரிப்பு பணி ரயில்வே அதிகாரிகள் ஆய்வு
ADDED : மார் 01, 2025 04:31 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் ரயில் தண்டவாளங்களில் நடந்த பராமரிப்பு பணிகளை ரயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
விழுப்புரம் ரயில் நிலையம் யார்டு அருகே நேற்று தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்தது.
இப்பணியில் ரயில்வே இன்ஜினியரிங், சிக்னல் பிரிவு அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டனர்.
திருச்சியில் இருந்து 3 ராட்சத பேக்கேஜிங் இயந்திரங்கள் வரவழைத்து, தண்டவாளங்களின் உறுதி தன்மை மேம்படுத்தும் வகையில், பழைய தண்டவாளங்களை அகற்றி, புதிதாக பொருத்துதல், புதிய ஜல்லி மற்றும் மண் போடும் பணிகள், பாயிண்ட் மாற்றம் செய்யும் பணி நடந்தது.
அதனையொட்டி நேற்று ரயில்களின் நேரம் சிறிது மாற்றம் செய்து விடப்பட்டது.
பராமரிப்பு பணிகளை திருச்சி கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் செல்வன் தலைமையில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.