/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அதிக லாபம் பெற இயந்திரம் மூலம் கரும்பு அறுவடை ராஜ் ஸ்ரீ சுகர்ஸ் தகவல்
/
அதிக லாபம் பெற இயந்திரம் மூலம் கரும்பு அறுவடை ராஜ் ஸ்ரீ சுகர்ஸ் தகவல்
அதிக லாபம் பெற இயந்திரம் மூலம் கரும்பு அறுவடை ராஜ் ஸ்ரீ சுகர்ஸ் தகவல்
அதிக லாபம் பெற இயந்திரம் மூலம் கரும்பு அறுவடை ராஜ் ஸ்ரீ சுகர்ஸ் தகவல்
ADDED : மே 05, 2024 06:23 AM
விக்கிரவாண்டி : கரும்பு விவசாயிகளுக்கு அகல பார் முறையில் கரும்பு நடவடி செய்து இயந்திரம் மூலம் அறுவடை செய்தால் அதிக லாபம் பெறலாம் என ராஜ் ஸ்ரீ சுகர்ஸ் தெரிவித்துள்ளது.
முண்டியம்பாக்கம் ராஜ் ஸ்ரீ சுகர்ஸ் கரும்பு அபிவிருத்தி துறை அறிக்கை:
முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலை உட்பட்ட பகுதியில் உள்ள கரும்பு விவசாயிகள் முதன்மை பட்ட கரும்பு அறுவடை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கி கடந்த ஏப்ரல் 24ம் தேதி கரும்பு அறவை முடிந்தது. 4.5 அடி அகல பார் முறையில் கரும்பு சாகுபடி செய்த விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலை ஏற்பாடு செய்து தந்த கரும்பு அறுவடை இயந்திரம் மூலம் விரைவாகவும் சிரமமின்றி அறுவடை செய்து முடித்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதை அடுத்து தற்போது அகலர் முறையில் கரும்பு சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
இயந்திர அறுவடை மூலம் நாள் ஒன்றுக்கு 80 முதல் 100 டன் வரை அறுவடை செய்ய முடிவதாலும், கரும்பு தோகைகள் வயலிலேயே துாளாக்கி ஏகருக்கு 3 முதல் 4 டன் வரை தோகைகள் மக்கி வயலுக்கு எருவாக கிடைக்கும்.
இயந்திர கரும்பு அறுவடையால் டன் ஒன்றுக்கு வெட்டும் கூலி 400 ரூபாய் வரை மிச்சமாகிறது. இதனால் ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் லாபம் அதிகரிக்கிறது.
எனவே கரும்பு நடவு செய்ய உள்ள விவசாயிகள் 4.5 அடி அகலப்பார் முறையில் நடவு செய்து இயந்திரங்கள் மூலம் எடை உழவு, அறுவடைப் பணிகளை செய்து சாகுபடி செலவை குறைத்து அதிக பலன் அடைய வேண்டுகிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.