ADDED : ஆக 19, 2024 12:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: வானுார் அடுத்த இடையஞ்சாவடி கம்பன் இளையோர் குழு சார்பில், ரத்ததான முகாம் நடந்தது.
அரசு ஆரம்ப பள்ளி வளாகத்தில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ரத்த வங்கியுடன் இணைந்து நடத்திய முகாமில் 70 இளைஞர்கள் ரத்ததானம் செய்தனர்.
நிகழ்ச்சியில், ஒன்றிய கவுன்சிலர் ஜெயந்தி ரமேஷ், திருச்சிற்றம்பலம் ஊராட்சி தலைவர் வெங்கடேசன் ஆகியோர் ரத்ததானம் வழங்குவதன் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினர்.
செல்வம், ராமானுஜம், முருகன், கம்பன் இளைஞர் குழு தலைவர் ஏழுமலை, செயலாளர் சுதாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

