/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...
/
ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...
ADDED : மார் 31, 2024 06:38 AM
விழுப்புரம் : விழுப்புரம் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வி.சி., கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து விழுப்புரத்தில் பேசிய பொன்முடி கூட்டம் இல்லாததால் நிர்வாகிகளை கடிந்து கொண்டார்.
விழுப்புரத்தில் நேற்று முன்தினம் முதல் நாள் பிரசாரத்தை சிக்னல் சந்திப்பில் நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு தொடங்கினர். பிரசாரத்தில் கூட்டம் இல்லாததால், முகம் சுளித்தபடி வேட்பாளர் ரவிக்குமாரை பார்த்து, 'ஏன் கூட்டத்தை சேர்க்கல, கட்சிக்காரங்க எங்கே' என கேட்டவர், அருகில் நின்றிருந்த தி.மு.க., நிர்வாகிகளை கடிந்து கொண்டார்.
கூட்டம் இல்லாவிட்டாலும் ஏரியாவுக்கு தகுந்தபடி வழக்கமான பாணியில் பேசினார், நகைக்கடை தெருவில், அங்கிருந்து நகை வியாபாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு சகஜமாக பேசினார். திரு.வி.க., வீதியில் ஒரு புத்தகக் கடை அருகே, 'நான் வேலை பார்த்தபோது இந்த கடையில் தான் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பேன் எனபழைய ஞாபகம் நினைவுக்கு வருகிறது' என்றார்.
மேலும், அந்த கடையில் இருந்த, தனது கடை உரிமையாளரான பழைய தோஸ்த்தை மைக்கிலேயே கூப்பிட்டு, நலம் விசாரித்தார்.

