/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
/
பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
ADDED : ஆக 29, 2024 08:01 AM

திண்டிவனம்: திண்டிவனத்தில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என எம்.எல்.ஏ., நகராட்சி அதிகாரியிடம் மனு கொடுத்தார்.
திண்டிவனம் நகராட்சியில் 265 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் நடைபெற்று வரும் பணிக்கான தொகை கோடிக்கணக்கில் நிலுவையில் உள்ளதால், பணிகள் நிறைவேறாமல் இருந்தது. கடந்த மாதம் 27ம் தேதி திண்டிவனம் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அர்ஜூனன், நகராட்சி நிர்வாக துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயனை நேரில் சந்தித்தார்.
அப்போது, குடிநீர் வடிகால் வாரியத்திற்கு கொடுக்க வேண்டிய நிலுவை தொகையை விரைந்து வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதன் பேரில் சில நாட்களுக்கு முன் நிலுவை தொகை 72 கோடி ரூபாய் நகராட்சிக்கு வழங்கப்பட்டது.
இதன் பேரில் அர்ஜூனன் எம்.எல்.ஏ., நகராட்சி மேலாளர் (பொறுப்பு) நெடுமாறனிடம் நிலுவை தொகை வழங்கப்பட்டு விட்டதால், குடிநீர் வடிகால் வாரியத்திற்கு தரவேண்டிய பணத்தை விடுவிக்க வேண்டும்.
இதன் மூலம் திண்டிவனத்தில் பிரதான போக்குவரத்து சாலையான நேரு வீதி, ராஜாஜி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி களில் உடனடியாக புதிய சாலை போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்தார்.
நகர செயலாளர் தீனதயாளன், முன்னாள் நகர்மன்ற தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.

