/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரூ.1.24 கோடியில் வளர்ச்சிப்பணி ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம்
/
ரூ.1.24 கோடியில் வளர்ச்சிப்பணி ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம்
ரூ.1.24 கோடியில் வளர்ச்சிப்பணி ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம்
ரூ.1.24 கோடியில் வளர்ச்சிப்பணி ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம்
ADDED : ஆக 06, 2024 06:53 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றிய வளர்ச்சி திட்டப் பணிக்கு ஒரு கோடியே 24 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விக்கிரவாண்டி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, சேர்மன் சங்கீதஅரசி ரவிதுரை தலைமை தாங்கினார். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், துணைச் சேர்மன் ஜீவிதா ரவி, பி.டி.ஓ., க்கள் பாலச்சந்திரன், குலோத்துங்கன் முன்னிலை வகித்தனர்.
மேலாளர் டேவிட் குணசீலன் வரவேற்றார். கணக்கர் தணிகைவேல் தீர்மானங்களை படித்தார்.
பொறியாளர்கள் முருகன், குமரன் சோமசுந்தரம், மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மறைந்த எம்.எல்.ஏ., புகழேந்திக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. புதிதாக பொறுப்பற்றுள்ள எம்.எல்.ஏ., அன்னியூர் சிவாவுக்கு வாழ்த்து தெரிவித்தும், ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் அத்தியாவசிய வளர்ச்சி திட்ட பணிகளான குடிநீர், சாலை வசதிகள் செய்திட ஒரு கோடியே 24 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கவுன்சிலர்கள் சார்பில் பழுதடைந்த அரசு தொகுப்பு வீடுகளை சரி செய்ய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
உதவியாளர் காமராஜ் நன்றி கூறினார்.