/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வளவனுார் பைபாஸ் சந்திப்பில் குறுகிய சாலையால் விபத்து அபாயம்
/
வளவனுார் பைபாஸ் சந்திப்பில் குறுகிய சாலையால் விபத்து அபாயம்
வளவனுார் பைபாஸ் சந்திப்பில் குறுகிய சாலையால் விபத்து அபாயம்
வளவனுார் பைபாஸ் சந்திப்பில் குறுகிய சாலையால் விபத்து அபாயம்
ADDED : ஜூன் 05, 2024 11:04 PM

விழுப்புரம்: விழுப்புரம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில், வளவனுார் பைபாஸ் சந்திப்பில் குறுகிய சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளதால் விபத்துகள் ஏற்படும் நிலை தொடர்கிறது.
விழுப்புரம், வளவனுார் அடுத்த கெங்கராம்பாளையம் பகுதியில், விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை திட்டத்திற்கான சாலை பணிகள் நடந்து, தற்காலிகமாக வாகனங்கள் செல்கிறது. கெங்கராம்பாளையத்தில், புதிய பைபாஸ் சந்திப்பு பகுதியில், மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால், அந்த இடத்தில் வாகனங்கள் ஒரு வழிபாதையாக திருப்பி விடப்பட்டுள்ளது.
புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் குறுகிய நிலையில் உள்ள (வலது புறம்) எதிர்புற சாலையில் தான் திரும்பி செல்கின்றன. அதே போல், விழுப்புரத்திலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் அதே குறுகிய சாலையில் தான் செல்கின்றன. அந்த இடங்களில் காலை, மாலை நேரங்களில் அதிக வாகன போக்குவரத்தால் வாகனங்கள் ஸ்தம்பிக்கிறது.
பஸ் உள்ளிட்ட வாகனங்கள் வேகமாக இயக்கப்படுதால், வலதுபுற சாலையில் இரு மார்க்க வாகனங்களும் அதிவேகமாக வந்து திரும்பி செல்வதால், அடிக்கடி சிறு விபத்துகள் நடந்து வருகிறது. மேம்பாலம் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால், குறுகிய சாலை டைவர்ஷன் போடப்பட்டுள்ள இடத்தில், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தற்காலிக சாலையை விரிவுபடுத்தியோ அல்லது இடது புற சாலையை திறந்து வாகனங்கள் சென்று வரவோ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.