ADDED : மார் 02, 2025 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அடுத்த வீரணாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜூனன், 50; கூலித்தொழிலாளி. இவரது கூரை வீடு நேற்று இரவு 7:30 மணியளவில் திடீரென மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது.
இதில், வீட்டில் வைத்திருந்த காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. அப்போது மேலும் தீ தொடர்ந்து அதிகளவில் பரவி வீட்டில் இருந்த அத்தியாவசிய பொருட்கள் மற்றும் வைக்கோல் போர் எரிந்து நாசமானது.
தகவலறிந்த திருவெண்ணெய்நல்லுார் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.