/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரோஷணை நகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை ஊர்வலம்
/
ரோஷணை நகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை ஊர்வலம்
ADDED : ஜூன் 11, 2024 06:43 AM

திண்டிவனம்: ரோஷணை (இந்து) நகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை ஊர்வலம் ஆணையாளர் தலைமையில் நடந்தது.
ரோஷணை (இந்து) நகராட்சி பள்ளியில் 2024-25ம் கல்வியாண்டிற்கான புதிய மாணவர்கள் சேர்க்கையும், இலவச பாடநூல் மற்றும் நோட்டுக்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை 9 மணிக்கு நடந்தது.
இதையொட்டி பள்ளியில் புதியதாக சேர்க்கப்பட்ட 15 மாணவர்களுக்கு மாலை அணிவித்து, மேள தாளத்துடன் ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர்.
தொடர்ந்து பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச புத்தகங்கள், நோட்டுக்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் மெகராஜ் பேகம் தலைமை தாங்கினார்.
கவுன்சிலர் தில்ஷாத் பேகம் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் வர வேற்றார். திண்டிவனம் நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்செல்வி, ஒலக்கூர் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் புத்தகங்கள் வழங்கினர்.
இடைநிலை ஆசிரியர் அனீஸ்பாத்திமா நன்றி கூறினார்.