/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விவசாயியிடம் ரூ.5.70 லட்சம் மோசடி மர்ம நபருக்கு போலீஸ் வலை
/
விவசாயியிடம் ரூ.5.70 லட்சம் மோசடி மர்ம நபருக்கு போலீஸ் வலை
விவசாயியிடம் ரூ.5.70 லட்சம் மோசடி மர்ம நபருக்கு போலீஸ் வலை
விவசாயியிடம் ரூ.5.70 லட்சம் மோசடி மர்ம நபருக்கு போலீஸ் வலை
ADDED : ஆக 13, 2024 04:50 AM
விழுப்புரம்: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக, விவசாயியிடம் ரூ.5.70 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் தேடிவருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த முகையூரைச் சேர்ந்தவர் ராஜசேகர்,45; விவசாயி. கடந்த 26ம் தேதி இவரது முகநுால் பக்கத்தில் வந்த வெளிநாட்டில் வேலை என்ற விளம்பரத்தை பார்த்து, அதில் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டார்.
எதிர் முனையில் பேசியவர், தான் இமிகிரேஷன் லாயர் என்றும், கனடா நாட்டில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு பிராசசிங் கட்டணம், விசா, மெடிக்கல் பிட்னஸ் பெற பணம் செலுத்த வேண்டும் என கூறினார்.
அதனை நம்பி ராஜசேகர், மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் 32 தவணைகளாக ரூ.5.70 லட்சம் பணத்தை அனுப்பினார். அதன்பிறகு அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராஜசேகர், விழுப்புரம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்குறித்து விசாரித்து வருகின்றனர்.