ADDED : மே 05, 2024 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : விழுப்புரத்தில் லாரியில் மணல் கடத்திய வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் தலைமையிலான போலீசார் நேற்று பிடாகம் தென்பெண்ணை ஆற்றில் ரோந்து சென்றனர். அங்கு, அனுமதியின்றி லாரியில் மணல் ஏற்றி கொண்டிருந்தவர்களை போலீசார் பிடிக்க முயன்றனர். அதில், விழுப்புரம், வழுதரெட்டியை சேர்ந்த ராஜவேல்,43; என்பவரை போலீசார் பிடித்து வழக்குப் பதிந்து கைது செய்தனர். தப்பியோடிய பிடாகம் குச்சிப்பாளையம் சுதாகர், பேரங்கியூர் அரவிந்த் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.