/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மணல் கடத்தல் நபர் குண்டாசில் கைது
/
மணல் கடத்தல் நபர் குண்டாசில் கைது
ADDED : செப் 07, 2024 05:26 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் தொடர் மணல் கடத்தலில் ஈடுபட்டவர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் தாலுகா போலீசார், கடந்த ஜூலை 28ம் தேதி சாலாமேடு சாலையில் ரோந்து சென்றனர். அப்போது, மேலமேடு மேம்பாலம் அருகே டாடா தோஸ்த் வாகனத்தில் ஆற்று மணல் கடத்தி வந்த விழுப்புரம் வழுதரெட்டி நித்யானந்தம் நகரைச் சேர்ந்த கூத்தாண்டவன் மகன் ராஜவேல்,36; என்பவரை கைது செய்து, விழுப்புரம் சிறையில் அடைத்தனர்.இந்த நிலையில், தொடர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வரும் இவரது குற்ற நடவடிக்கையை தடுக்கும் வகையில், எஸ்.பி., தீபக்சிவாஜ் பரிந்துரையின் பேரில், ராஜவேலை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்திட கலெக்டர் பழனி உத்தரவிட்டார்.
இதனையடுத்து, விழுப்புரம் தாலுகா போலீசார், ராஜவேலுவை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.