sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

'பதில் சொல்; பரிசு வெல்' தினமலர் மெகா வினாடி வினா போட்டி; விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில் ஆரவாரத்துடன் துவங்கியது

/

'பதில் சொல்; பரிசு வெல்' தினமலர் மெகா வினாடி வினா போட்டி; விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில் ஆரவாரத்துடன் துவங்கியது

'பதில் சொல்; பரிசு வெல்' தினமலர் மெகா வினாடி வினா போட்டி; விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில் ஆரவாரத்துடன் துவங்கியது

'பதில் சொல்; பரிசு வெல்' தினமலர் மெகா வினாடி வினா போட்டி; விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில் ஆரவாரத்துடன் துவங்கியது


ADDED : செப் 01, 2024 04:34 AM

Google News

ADDED : செப் 01, 2024 04:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : 'தினமலர்' புதுச்சேரி பதிப்பின் இந்தாண்டிற்கான 'பதில் சொல்; பரிசு வெல்' மெகா வினாடி வினா போட்டி நேற்று விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் ஆரவாரத்தோடு துவங்கியது.

புதுச்சேரி, தமிழக பள்ளி மாணவர்களுக்காக 'தினமலர் - பட்டம்' இதழ் சார்பில், 'பதில் சொல்; பரிசு வெல்' என்ற தலைப்பில் வினாடி வினா போட்டிகள், ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

புதுச்சேரி பதிப்பு சார்பில் இந்தாண்டுக்கான போட்டி, புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மொத்தம் 160 பள்ளிகளில் நடத்தப்பட உள்ளது. இதனை 'தினமலர் - பட்டம்' இதழுடன், புதுச்சேரி ஆச்சாரியா உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களுடன் இணைந்து நடத்துகிறது.

இந்த ஆண்டின் போட்டி, விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் தகுதி சுற்றாக முதல்நிலை தேர்வு நடந்தது. இதில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை பயிலும் 450 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு பொது அறிவு உட்பட 25 வினாக்கள் கேட்கப்பட்டு 20 நிமிடங்கள் தேர்வு நடந்தது.

அதிக மதிப்பெண் அடிப்படையில் 16 மாணவர்கள், தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான வினாடி வினா போட்டி துவக்க நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களான 'தினமலர்' நாளிதழ் வெளியிட்டாளர் கே.வெங்கட்ராமன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், ஏ.டி.எஸ்.பி., திருமால் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். தொடர்ந்து, 16 மாணவர்களும் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி வினா போட்டி மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்டது.

ஒவ்வொரு சுற்றிலும் 8 கேள்விகள் கேட்கப்பட்டன. 8 அணியினருக்கும், 'சாய்ஸ்' அடிப்படையில், வினாக்கள் கேட்கப்பட்டன. அதன் பின், அனைத்து அணியினருக்கும் பொதுவான கேள்விகள் கேட்கப்பட்டு, அதில் முதலில் பதில் சொல்லும் அணிக்கு, மதிப்பெண் தரப்பட்டது.

சவாலான கேள்விகளை அசத்தலாக எதிர்கொண்டு மாணவர்கள் பதில் அளித்தனர். இறுதியில் 9ம் வகுப்பு மாணவிகள் யுவஸ்ரீ, பிரியதர்ஷினி அணி 30 மதிப்பெண்ணுடன் முதலிடம் பிடித்து அசத்தியது. 9ம் வகுப்பு மாணவிகள் திவ்யா, ஜீவிதா அணி 15 மதிப்பெண்ணுடன் இரண்டாம் இடத்தை பிடித்தது. இவ்விரு அணிகளும், மாநில அளவிலான போட்டி நடக்கும் அடுத்த சுற்றுக்கு தேர்வானது.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 'தினமலர்' நாளிதழ் வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், ஏ.டி.எஸ்.பி., திருமால், ஆச்சாரியா உலக தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களின் தலைவர் அரவிந்தன் ஆகியோர் பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

முன்னதாக, சிறப்பு விருந்தினர்களுக்கு, 'தினமலர்' வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன் நினைவு பரிசு வழங்கினார். மேலும், வினாடி வினா போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலை பள்ளி தாளாளர் ராஜசேகரன், அண்ணாமலை அறக்கட்டளை பொருளாளர் சிதம்பரநாதன், நிர்வாக இயக்குனர் முத்துசரவணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

பள்ளி முதல்வர் யமுனா ராணி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us