
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே இருவேல்பட்டு இ.எம்.,சுப்ரமணிய ரெட்டியார் விவேகானந்தா வித்யாலயா பள்ளி ஆண்டு விழா நடந்தது.
பள்ளி முதல்வர் ஸ்ரீமதி ராஜலட்சுமி தலைமை தாங்கினார். கவுரவ தாளாளர் சூரியநாராயணன் முன்னிலை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் சுப்ராயன், வி.ஆர்.பி., பள்ளி தாளாளர் சோழன், எர்த் டெக்னிக்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் லட்சுமி நரசிம்மன் சிறப்புரையாற்றினர்.
பின், மாணவர்களின் வரவேற்பு நடனம், ஞானப்பழம், காவடியாட்டம், சங்கடகர சதுர்த்தி, ஒயிலாட்டம், கோலாட்டம், காளிங்க நர்தனம், ஹிந்தி உரையாடல் நடந்தது.
தொடர்ந்து, ஓட்டு போடுவதின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது.
தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசு வழங்கப்பட்டது. விழாவில், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

