/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனத்தில் பள்ளி அளவிலான வாலிபால் போட்டி பரிசளிப்பு விழா
/
திண்டிவனத்தில் பள்ளி அளவிலான வாலிபால் போட்டி பரிசளிப்பு விழா
திண்டிவனத்தில் பள்ளி அளவிலான வாலிபால் போட்டி பரிசளிப்பு விழா
திண்டிவனத்தில் பள்ளி அளவிலான வாலிபால் போட்டி பரிசளிப்பு விழா
ADDED : ஆக 08, 2024 12:23 AM

திண்டிவனம் : திண்டிவனத்தில் பள்ளி அளவில் நடந்த வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கப்பட்டது.
திண்டிவனம் அரசு மருத்துவமனை எதிரிலுள்ள யூனியன் கிளப் மைதானத்தில், திண்டிவனம் கைப்பந்து கழகத்தின் சார்பில் 12ம் ஆண்டு வாலிபால் போட்டிகள் நடந்தது.
இதில் 19 வயதிற்கு உட்பட்ட பள்ளி அளவிலான புதுச்சேரி,விழுப்புரம், செங்கல்பட்டு, திண்டிவனம் கல்வி மாவட்டத்தை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். 20 அணிகள் பங்கேற்ற போட்டியில், மயிலம், கூட்டேரிப்பட்டிலுள்ள செயின்ட் ஜான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி முதல் இடத்தை பிடித்து ரூ.5 ஆயிரம் பரிசை தட்டிச்சென்றது.
இரண்டாவது இடத்தை திண்டிவனம் அருகே உள்ள கருவம்பாக்கத்திலுள்ள திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இரண்டாவது இடத்தை பிடித்து ரூ.3 ஆயிரத்தை பெற்றனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை திண்டிவனம் கைப்பந்து கழகத்தின் தலைவர் கஜபதி தலைமையிலான நிர்வாகிகள் செய்திருந்தனர்.