/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பள்ளி மேலாண்மை மறு கட்டமைப்பு கூட்டம்
/
பள்ளி மேலாண்மை மறு கட்டமைப்பு கூட்டம்
ADDED : செப் 01, 2024 11:14 PM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த பனப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மறு கட்டமைப்பு கூட்டம் நடந்தது.
வட்டார கல்வி அலுவலர் கவிதா தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் பூவராகவன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை எழிலரசி வரவேற்றார்.பள்ளி மறு கட்டமைப்பு தேர்தலில் தலைவராக மணியரசி, துணைத் தலைவராக மீனாட்சி, உள்ளாட்சி பிரதிநிதிகளாக ஊராட்சி தலைவர் பூவராகவன், வார்டு உறுப்பினர் விஜயகுமார், கல்வியாளராக ஏழுமலை உட்பட பலர் தேர்வு செய்யப்பட்டனர்.தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர் கவிதா சான்றிதழ் வழங்கினார்.
இல்லம் தேடிக் கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழழகன், ஆசிரியைகள் உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.