/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் அரசு கல்லுாரில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு
/
விழுப்புரம் அரசு கல்லுாரில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு
விழுப்புரம் அரசு கல்லுாரில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு
விழுப்புரம் அரசு கல்லுாரில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு
ADDED : ஜூன் 25, 2024 07:01 AM

விழுப்புரம் : விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லுாரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடந்தது.
கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தலைமையிலான, சேர்க்கை குழுவினர், காலை 9:00 மணிக்கு தொடங்கி கலந்தாய்வை நடத்தினர். சுழற்சி-1 பிரிவில் 1,000 பேரும், சுழற்சி-2 பிரிவில் 700 மாணவர்களும் பங்கேற்றனர். இதில், 200 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆணை வழங்கப்பட்டது.
தொடர்ந்து, 25ம் தேதி பி.ஏ., வரலாறு, பொருளியல் பிரிவுக்கும், 26ம் தேதி பி.காம்., - பி.ஏ., தொழில் பிரிவு மாணவர்களுக்கும், 27ம் தேதி பிற்பட்டோர், முஸ்லிம், அருந்ததியர், மலைவாழ் பிரிவு மாணவர்களுக்கான அனைத்து பாட பிரிவுகளுக்கும், 28ம் தேதி பி.ஏ., தமிழ், ஆங்கிலம் பாட பிரிவுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.