/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சரஸ்வதி கல்லுாரியில் சுகாதார மேலாண்மை கருத்தரங்கம்
/
சரஸ்வதி கல்லுாரியில் சுகாதார மேலாண்மை கருத்தரங்கம்
சரஸ்வதி கல்லுாரியில் சுகாதார மேலாண்மை கருத்தரங்கம்
சரஸ்வதி கல்லுாரியில் சுகாதார மேலாண்மை கருத்தரங்கம்
ADDED : ஆக 07, 2024 05:28 AM
திண்டிவனம் : திண்டிவனம் அருகே உள்ள சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியில் மகளிர் சுகாதார மேலாண்மை குறித்த கருத்தரங்கம் நடந்தது.
கோனேரிக்குப்பத்திலுள்ள கல்லுாரி வளாகத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து நடத்திய முகாமிற்கு, கல்லுாரியின் முதல்வர் வீரமுத்து தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் சத்தியா வரவேற்றார். முதன்மை நிர்வாக அலுவலர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். மகளிர் மேம்பாட்டு ஆணையத்தின் கூடுதல் இயக்குநர் காஞ்சனா சிறப்புரையாற்றினார். கருத்தரங்கில் மாதவிடாய் சுழற்சி முறை, ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
இதில் நிர்வாக அலுவலர் சிவா,பெற்றோர் ஆசிரியர் கழக ஒருங்கிணைப்பாளர் தண்டபாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முனைவர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.