/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி காசிவிஸ்வநாதர் கோவிலில் திருப்பணிகள் துவங்க பாலாலயம்
/
செஞ்சி காசிவிஸ்வநாதர் கோவிலில் திருப்பணிகள் துவங்க பாலாலயம்
செஞ்சி காசிவிஸ்வநாதர் கோவிலில் திருப்பணிகள் துவங்க பாலாலயம்
செஞ்சி காசிவிஸ்வநாதர் கோவிலில் திருப்பணிகள் துவங்க பாலாலயம்
ADDED : ஆக 23, 2024 07:19 AM

செஞ்சி: செஞ்சி காசி விஸ்வநாதர் கோவிலில் திருப்பணிகள் செய்ய பாலாலய பூஜை நடந்தது.
செஞ்சி சிறுகடம்பூரில் உள்ள பழமையான விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவிலில் திருப்பணிகள் செய்வதற்கான பாலாலய பூஜை நேற்று நடந்தது. இதை முன்னிட்டு கலச பிரதிஷ்டை செய்து, விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, கோபூஜை, மூல மந்திர ஹோமம், அஸ்திர ஜபம், விசேஷ திரவிய ஹோமம் நடந்தது.
காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்பாள், விநாயகர், பாலமுருகர், நந்தி உருவங்கள் பொறிக்கப்பட்ட அத்திமர பலகைகளுக்கு கலச நீர் கொண்டு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை செய்தனர். உற்சவர் சிவன், பார்வதி, மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.