/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'லெப்ட்ல' கை போட்டு 'ரைட்ல' போன கூட்டணி சண்முகம் கிண்டல்
/
'லெப்ட்ல' கை போட்டு 'ரைட்ல' போன கூட்டணி சண்முகம் கிண்டல்
'லெப்ட்ல' கை போட்டு 'ரைட்ல' போன கூட்டணி சண்முகம் கிண்டல்
'லெப்ட்ல' கை போட்டு 'ரைட்ல' போன கூட்டணி சண்முகம் கிண்டல்
ADDED : ஏப் 02, 2024 03:51 AM
விழுப்புரம், : விழுப்புரத்தில் நடந்த அ.தி.மு.க., பிரசார கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் சண்முகம் பா.ம.க.,வை கிண்டலடித்து பேசினார்.
அவர் பேசுகையில், 'கடந்த 2011ல் அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி அமைந்தது. அப்போது, சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஜெ., தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்தார். ஜெ., எப்போதும், தன் முடிவை மாற்றிக்கொண்டவர் இல்லை. ஆனால், கீழ்மட்ட தொண்டர்கள் விரும்பியதை ஏற்ற அவர், தே.மு.தி.க., கூட்டணி அமைத்து, வெற்றியும் கண்டார்.
அதுபோல், அ.தி.மு.க., - தே.மு.தி.க., மீண்டும் கூட்டணி அமைந்துள்ளது. எதிரே, ஆளும் தி.மு.க., தரப்பில், பல கட்சிகளுடன் கொள்கை விரோத கூட்டணி அமைந்துள்ளது. மற்றொரு கூட்டணி, 'லெப்ட்ல' கை போட்டு, 'ரைட்ல' போன கூட்டணி.
இல்லை... இல்லை... இரண்டு பக்கமும் கை போட்டு பார்த்து, சந்தர்ப்பவாதமா போயுள்ள கூட்டணி என அவர், பா.ம.க.,வை விமர்சித்து பேசினார். அப்போது, அங்கிருந்த ஒருவர், 'நீங்களும் உறவினர் என, 'லெப்ட், ரைட்' துாது போய், கூட்டணி பேசி, கடைசி நேரத்தில் ஏமாந்து வந்தவர்தானே என கிண்டலடித்தார்.

